பாராளுமன்றப் பகுதியில் மோதல் : 42 பேர் காயம்..!!!

file image

பாராளுமன்றிற்கு பிரவேசிக்கும் பத்தரமுல்ல - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் நேற்று புதன்கிழமை இரவு பதற்ற நிலை ஏற்பட்டது.

குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதன்போதான மோதலில் 42 பேர் காயமடைந்ததுடன், அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு - தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றையதினம் கொழும்பு பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாலும் பாராளுமன்ற பொல்துவ சந்திக்கு முன்னாலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 84 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here