தடைப்பட்ட ஜனாதிபதியின் சிங்கப்பூர் பயணம்

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர்.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த போதிலும், பாதுகாப்பு நிலைமை காரணமாக செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஜனாதிபதி தனி விமானம் மூலம் மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி சிங்கப்பூர் சென்ற பின்னர் பதவி விலகல் கடிதம் தரப்படும் என ஜனாதிபதி தொலைபேசியில் அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதியின் மாலைதீவு விஜயத்தை எதிர்த்து அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் குழு ஒன்று நேற்று தலைநகரில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here