7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி - சபாநாயகர்..!!!




நாளை சனிக்கிழமை விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் எனவும், அரசியலமைப்பிற்கமைய பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும் எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இழுபறி நிலைக்கு மத்தியில் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று மாலை மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்தார்.

சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாகவே குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் மூலப் பிரதியை சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் கொழும்புக்கு இராஜதந்திரி ஒருவர் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே தற்போது பதவி விலகல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here