மீண்டும் நாட்டில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்..!!!



மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாக கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைப்பிடுத்தல், அவசியமற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தம் மற்றும் ஒன்று கூடல்களை கட்டுப்படுத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸானது ஒமிக்ரோன் வைரஸின் திரிபாக கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலே காணப்படுவதாகவும், சுகாதார வழிமுறைகள் முறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here