யாழ். - அச்சுவேலி தனியார் பேருந்துக்கள் சேவையில் இருந்து விலகின..!!!


இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் (டிப்போ) நீண்ட நாட்களாக காத்திருந்த போதிலும், தமக்கான எரிபொருளை உரிய முறையில் வழங்காததால் தாம் சேவையில் இருந்து விலகி உள்ளதாக அச்சுவேலி தனியார் பேருந்து சாரதிகள் தெரிவித்துள்னர்.

யாழ்ப்பாணம் - அச்சுவேலிக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாத காரணத்தினால் பயணிகள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

டீசல் தட்டுப்பாடு மற்றும் தமக்கான டீசலை உரிய முறையில் வழங்காமை ஆகியவை காரணமாக பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் , பாடசாலை போக்குவரத்து சேவை, அத்தியாவசிய சேவைகளிலிருந்து தாம் விலகி உள்ளதாக தனியார் பேருந்து வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

சேவைகளை இடை நிறுத்தியுள்ளமையால், சாரதி, நடத்துனர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு முகம் கொடுத்து வருகின்றனர்

அச்சுவேலி தனியார் பேருந்து சேவையில் 60 பேருந்துகள் சேவையில் ஈடுபட்ட வந்த நிலையில் தற்போது ஆறு பேருந்துகளை மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாக சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here