Sunday 3 July 2022

வடமாகாணத்தில் பழைய துவிச்சக்கர வண்டிகளை வாங்க முண்டியடிக்கும் பொதுமக்கள்..!!!

SHARE

இரும்புக் கடைகளில் பழைய துவிச்சக்கர வண்டியை வாங்குவதற்கும் மக்கள் முண்டியடிக்கும் சம்பவங்கள் வடமாகாணம் முழுதும் நடந்து வருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டி பயன்பாடு அதிகம்.

நாட்டில் புதிய துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 85 ஆயிரம் தொடக்கம் 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.

இறக்குமதியின்மையாலும் கடும் கிராக்கி நிலவுகின்றது. புதிய ஜப்பான் துவிச்சக்கர வண்டி ஒன்றில் விலை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேவேளை நாளுக்கு நாள் அதன் விலையும் அதிகரித்து செல்கின்றது. இந்த நிலையில், இரும்பு கடைகளில் எடைக்காக விற்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பெற்று சீரமைத்து பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் புதிய துவிச்சக்கர வண்டிகளிற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. புதிய துவிச்சக்கர வண்டியை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மீண்டும் இரும்பு கொள்வனவு செய்யப்பட்ட இடங்களிற்கு சென்று

அதனை மக்கள் வாங்கி வருகின்றனர். ஆனால் தற்பொழுது அதன் பெறுமதி குறைந்தது 10 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது.

அதனை பெற்றுக்கொண்டு சீரமைப்பதற்காக மேலும் 20 ஆயிரம் ரூபாவரை செலவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

SHARE