ராஜபக்ஷவினர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் - சுப்பிரமணியன் சுவாமி..!!!


மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாய ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் என பா.ஜ.க. வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும் ?

அப்படியானால் நமது அயலவனாக உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்ஷவினர் கோரும் போது நாங்கள் வழங்கத் தயார் ” என்று சுப்பிரமணியன் சுவாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Previous Post Next Post


Put your ad code here