
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும், கடவத மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றிரவு (09) பிரதமரின் வீட்டிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று பிரவேசித்ததை அடுத்து, தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டில் இருந்த கலைப் பொருட்கள், மதிப்பு மிக்க புத்தகங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது
Tags:
sri lanka news