ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு..!!!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயகத்தால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு கப்பல் இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

3700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அந்த கப்பல் இலங்கையை வந்தடைய தாமதமாகியுள்ளது.

அதேவேளை நாளைய தினமும் மற்றும் எதிர்வரும் 16ஆம் திகதியும் மேலும் 3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here