கடலுக்கு பலியான பல்கலைக்கழக மாணவன்..!!!




பெலிவத்த, சீனகல்ல இயற்கை கடல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதில் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளார்.

திடீரென கடல் அலை தடாகத்தின் புகுந்து அங்கு நீராடிக்கொண்டிருந்தவர்கள் முவரையும் கடலுக்கு இழுத்துச் சென்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

ருஹூனு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தை சேர்ந்த 22 வயதுடைய மாணவர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் காணாமல் போயுள்ளார்.

உயிர் பிழைத்த மாணவர்கள் இருவரும் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று காலை குறித்த மூன்று மாணவர்களும் மாணவர்கள் குழு ஒன்றுடன் சீதகல்ல இயற்கை கடல் தடாகத்திற்கு வந்துள்ளனர்.

பிரதேசவாசிகள் மற்றும் திக்வெல்ல பொலிஸார் இணைந்து காணாமல் போன மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here