
லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று (02) நள்ளிரவு வரை திருகோணமலை எரிபொருள் களஞ்சியத்தில் இருந்து எரிபொருளை வெளியிட்டு வருகிறது.
நேற்று முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பௌசர்களும் எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தொடர்ந்தும் எரிபொருளை விநியோகித்து வருவதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் மேலும் 03 டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news