சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பிய ஒருவர் கைது..!!!




சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பிய சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் தென் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது காலி கோட்டைப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பில் வெளியிடப்பட்ட விளம்பரம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த விளம்பரத்தை முதலில் வெளியிட்ட பிரதான சந்தேக நபர் மற்றும் அதற்கு ஆதரவு தெரிவித்த ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தென் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here