
மீகஹவத்தை, கந்துபொட பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடி அறையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மீகஹவத்தை பொலிஸாருக்கு நேற்று (12) பிற்பகல் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்துபொட,தெல்கொட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news