பலாலி - தமிழக விமான சேவைகள் தாமதமாவதற்கான காரணம் இது தான்..!!!


பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவைகளுக்கான செலவீனங்கள் குறித்த கரிசனைகளால் தாமதமடைவதாக தெரியவருகின்றது.

குறிப்பாக, விமான சேவையை வழங்கும் நிறுவனம் வாடகைக்கு அமர்த்தப்படும் விமானங்கள் ஊடாக சேவைகளை தொடர்ச்சியாக சேவைகளை வழங்கினால் பாரிய நட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும் என்பதில் அதீத கரிசனைகளைக் கொண்டுள்ளது.

இதனால், திட்டமிடப்பட்ட விமானசேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கே நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கான உரிய அனுமதிகளை இந்திய மத்திய அரசிடமிருந்துந்து பெற்றுக்கொள்வதற்கு மும்முரமாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இதன் காரணமாகவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் கடந்த முதலாம் திகதி விமான சேவையை ஆரம்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சொற்பகாலத்தினுள் குறித்த விடயத்திற்கு தீர்வுபெறப்பட்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதற்குரிய தரப்புக்களுடன் பேச்சுக்கள் இடம்பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.

Previous Post Next Post


Put your ad code here