ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகலை அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக்கோரி கொழும்பை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் இன்று பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதி மாளிகைக்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதையடுத்து தற்போது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை வளாகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகலை அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
