குரங்கு அம்மையால் முதல் மரணம்..!!!




 உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.

குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த நபர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா தெரிவித்துள்ளார்.

மேலும், குரங்கு அம்மை அறிகுறி இருந்த நபருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here