யாழ் மாவட்டத்தில் முதலிடம்பெற்ற உஷாவிற்கு தங்கநகை வழங்கிய நீயூ லலிதா..!!!


அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை, கலைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற மாற்றுத்திறனாளியான மாணவி உஷா கேசவனிற்கு நியூ லலிதா நகைமாளிகை தங்கநகை ஒன்றினையும் பணப்பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளது.

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கலைப் பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையை சேர்ந்த குறித்த மாணவி அகில இலங்கை ரீதியில் 22 ஆம் நிலையைப் பெற்றுள்ளார். ஊடகக்கற்கை, வரலாறு, தமிழ் ஆகிய மூன்று பாடநெறிகளுக்கும் 3ஏ சித்திகளைப் பெற்ற இம் மாணவி ஓர் மாற்றுத் திறனாளியாவார்.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த உஷா தனது ஆரம்பக் கல்வியை கொட்டடி நமசிவாயம் பாடசாலையிலும் , உயர்கல்வியை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும் பயின்றார். இவரது தந்தை இறுதி யுத்தத்தில் உயிரிழந்த நிலையில் வறுமையின் மத்தியில் தயாரின் அரவணைப்பிலேயே வாழ்ந்துவந்துள்ளார். மேலும் தனது உயர்தர கல்வியின் போது சுன்னாகம் வாழ்வகத்தில் தங்கி இருந்தே கல்வியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  






Previous Post Next Post


Put your ad code here