யாழில். போதைப்பொருளை நுகர்ந்துகொண்டிருந்த குற்றத்தில் இரு பெண்கள் கைது..!!!



யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 2 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு பெண்கள் போதைப்பொருளை நுகர்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 28 மற்றும் 29 வயதுடையோர் எனவும் , அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here