Sunday 11 September 2022

ஆசிய கிண்ணத்தினை 6வது தடவையாகவும் கைப்பற்றியது இலங்கை..!!!

SHARE

ஆசியக்கிண்ணத்தினை இலங்கை அணி 06வது தடவையாகவும் கைப்பற்றியுள்ளது.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் 45 பந்துகளில் 06 நான்கு ஓட்டங்கள் 03 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 171 என்ற வெற்றியிலக்கிரனை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஒட்டங்களை பெற்று 23 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

1986,1997, 2004, 2008 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

அத்துடன், பாகிஸ்தான் அணி இதுவரையில் இரண்டு முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

1997 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றது.
SHARE