ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்ளுக்கும் நமது வாழ்க்கையின் சில அம்சங்களுடன், தொடர்பு உள்ளது. ராசி மாற்றங்கள், இந்த கிரகங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிக்காரர்களையும் பாதிக்கிறது.
எனவே சுக்கிரனின் ராசிகளை மாற்றுவதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கி அன்னை மகாலக்ஷ்மி அருளை பொழிந்து செல்வத்தை அள்ளி வழங்குவாள். இதனால் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளிதரப்போகிறார். நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது புதிய தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு இதுவே சிறந்த நேரம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தை வரம் என்று கூட சொல்லலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை சேர்க்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சொத்துக்களால் ஆதாயம் பெறலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு பூர்வீக நிலம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
உங்கள் பணி பாராட்டப்படும். பண ஆதாயம் இருக்கும், இது நிதி சிக்கல்களில் இருந்து விடுபட உதவும். மேலும், மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
சுக்கிரன் கன்னியில் சஞ்சரிப்பது வணிக ரீதியாக மிகவும் சாதகமான பலன்களைத் தரும். எனவே அவர்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
Tags:
Rasi Palan