தம்பதியினரை விருந்துக்கு அழைத்து மனைவி வெட்டிக் கொலை: ஆபத்தான நிலையில் கணவன் வைத்தியசாலையில்..!!!



கணவனையும் மனைவியையும் விருந்துக்கு அழைத்து பெண்ணை வெட்டிக் கொன்ற சம்பவமொன்று பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமான பெண்ணின் நண்பர் ஒருவரினால் தம்பதியை விருந்துக்கு அழைப்பதாக கூறி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பின்னர் பெண்ணும் அவரது கணவரும் மோட்டார்சைக்கிளில் சென்று பொருபனபா லத்துக்கருகில் விருந்துக்கு அழைத்த நபருக்காக காத்து நின்றுள்ளனர் .

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் பின் ஆசனத்தில் நபர் வெட்டுக் கத்தியால் பெண்ணை தாக்கியுள்ளார். அத்துடன் கணவன் மீதும் தாக்கியுள்ளார் .

இதன்போது காயமடைந்த கணவன், மனைவி மற்றும் தாக்குதலை மேற்கொண்ட நபர் மூவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய ஒருவர் எனவும் அவர் விகாரை வீதி, பொரலஸ்கமுவ பிரதேசத்தை ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.



Previous Post Next Post


Put your ad code here