வியாழக்கிழமை முதல் அதிக நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்க மறுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டை நீட்டிப்பதட்கான சரியான காரணங்களை மின்சார சபை முன்வைக்காததனால் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, நாளை முதல் 1 மணித்தியாலம் மற்றும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை தொடர்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.