ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட அல்போன்ஸ் புத்திரன்..!!!




நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு 5 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக இப்போது பிருத்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.செப்டம்பர் 8 ஆம் தேதி ஓனம் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அல்போன்ஸ் அறிவித்தார். ஆனால் படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ரிலீஸ் செய்யாததற்கு மன்னிப்புக் கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
Previous Post Next Post


Put your ad code here