
யாழ் வடமராட்சி முள்ளிக்காட்டு பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சுமார் 60 லீற்றர் கசிப்புடன் இருவர் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்த 35 வயது மற்றும் 50 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.