
ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் தங்கியுள்ள டோக்கியோ இம்பீரியல் ஹோட்டலுக்கு முன்பாக இலங்கையர்கள் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news