எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அன்றைய தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாதென பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.