மீண்டும் பெரியளவில் வெடிக்கும் போராட்டம்..! தயாசிறி தகவல்..!!!




போராட்டம் முடிந்து விட்டது என எவராவது நினைத்தால், அது முற்றிலும் தவறானது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை எதிர்காலத்தில் மிகப் பெரியளவிலான போராட்டம் வெடிக்கும் என எதிர்பார்க்கின்றேன். இளைஞர்களுக்காக நாட்டிலும் நிர்வாகத்திலும் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை என்பதே இதற்கு காரணம்.கல்வியை புதிதாக உருவாக்கி, திறமையில் முழுமை பெற்ற அணியை உருவாக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் அரசாங்கத்திற்கு இல்லை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரும் திருடர்கள் அல்ல.

ஒரு சிலரது கொள்ளையடிப்புகள் காரணமாக முழு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது பலனளிக்காத விடயம் எனவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here