Sunday 11 September 2022

திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை அவசியம்! - யாழ்ப்பாணத்தில் விசேட சந்திப்பு..!!!

SHARE

திருக்கோணேஸ்வரத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிராக சைவசமய அமைப்புக்கள் ஒன்று கூடி தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் விசேட கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்றபோது மூன்று தீர்மானங்கள் எட்டப்பட்டது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதனுடைய பிராந்திய அலுவலக மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டது.

திருக்கோணேஸ்வர ஆலயப் பகுதியில் திட்டமிட்டு கடைத் தொகுதிகளை நிரந்தரமாக அமைப்பதற்கு அவசர ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. இது குறித்து எதிர்ப்புக்கள் வெளியான நிலையில்
ஆலயத்துக்கு உரித்தான 18ஏக்கர் நிலப்பரப்புக் காணிக்குள் தொல்லியல் திணைக்களமும், கிழக்கு மாகாண ஆளுநரும் ஆலய நிலத்தை அபகரிக்கும்
செயற்பாட்டில் இறங்கியிருப்பதைத் தடுப்பதற்காகவே இன்றைய கூட்டம் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினர்,நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள், செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளிட்ட சைவசமய பெரியார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் இருப்பை பாதுகாக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி ஆவண செய்ய வேண்டும்,
திருக்கோணஸ்வர் ஆலயத்தில் இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் விருத்தி செய்தல், திருக்கோணேச்சரத்திற்கான யாத்திரையை ஊக்குவிப்பது என்ற மூன்று தீர்மானங்கள் எட்டப்பட்டது.








SHARE