கதிரான பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்..!!!




மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான பாலத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (11) மாலை மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை இன்று (12) நடைபெறவுள்ளதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here