தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடம் 200 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது..!!!




தேசிய அடையாள அட்டையை (NIC) பெற்றுக்கொள்ள முதல் தடவையாக விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து 200 ரூபா கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டணம் அறிவிடப்படும் என அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

15 வயது பூர்த்தியடைந்த பின்னர் முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு இதுவரையில் 100 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டதாகவும், அந்த தொகை தற்போது 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

காணாமல் போன தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள இதுவரை 500 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டதாகவும், அதற்கான கட்டணம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள 250 ரூபா இதுவரை அறவிடப்பட்டதுடன், அந்த தொகை 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டார்.


Previous Post Next Post


Put your ad code here