நாளை முதல் சமையல் எரிவாயு விலை குறைவடைகிறது..!!!




நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு இவ்வாறு எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது.

அதேசமயம் ஏனைய எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here