Monday 3 October 2022

நீரிழிவு நோயை ஓட ஓட விரட்டும் இஞ்சி..!!!

SHARE



இஞ்சி சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர் நிபுணர்கள்.

இஞ்சி என்பது நமது சமையலறையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் பொருள் ஆகும்.

இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இதை சாப்பிடுவதால் பல நோய்கள் குணமாகும். இஞ்சி ஒன்றல்ல பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

இஞ்சியை சரியான அளவில் உட்கொள்ளும் போது, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.நாள் ஒன்றுக்கு 4 கிராம் இஞ்சியை சாப்பிட்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.

எனினும், அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

இஞ்சியில் அடங்கியுள்ளஆரோக்கிய நன்மைகள்

கொலஸ்ட்ரால்

நீரிழிவு நோயாளிகளைப் போலவே இதய நோய் உள்ளவர்களுக்கும் இஞ்சி ஒரு அரு மருந்தாகும்.கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதிலும் இஞ்சி மிகவும் நன்மை பயக்கும்.

அதாவது மாரடைப்பு அபாயமும் இதன் மூலம் குறையும். தேநீருடன் கூட பயன்படுத்தலாம்.

காய்கறிகளை சமைக்கும் போதும் பயன்படுத்தலாம்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி அதிகம் உள்ளவர்களும் இதனை உட்கொள்ளலாம்.குறிப்பாக பச்சையாக இஞ்சியை உட்கொள்வதன் மூலம், அதிக பலனை பெறுவீர்கள்.

வயிறு தொடர்பான பிரச்சனைகள்

பச்சை இஞ்சி வயிற்றுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இஞ்சி செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது.

வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன பிரச்சனைகள் உள்ளவர்கள், பச்சையாக இஞ்சியை சாப்பிட, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.
SHARE