
இரவு உணவுக்காக பலாக்காய் பறிக்க பக்கத்து தோட்டத்துக்கு சென்ற 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி கொடக்கவெல,மொரகஹயதுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்த பெண் பலாக்காய் பறிக்கச் சென்ற தோட்டத்தில் இரண்டு கட்டுதுவக்குகள் வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்து, அதனை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் இந்த மரணம் தொடர்பாக அந்தத் தோட்டத்தின் காவலாளியை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.உயிரிழந்த பெண் அன்றைய தினம் மாலை பலாக்காய் பறிப்பதற்காக அந்தத் தோட்டத்திற்கு சென்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் கொடக்கவெல பொலிஸார் குறிப்பிட்டனர்.
Tags:
sri lanka news