பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது..!!!




அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் இன்று காலை மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இன்று குறித்த சடலம் கடற்படையினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார் மீட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியினை பொலிஸார் கோரியிருந்தனர்பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த பெண் காரைதீவு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் ஓர் ஆசிரியர் எனவும் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here