
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிய 02 கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் குறித்த கப்பல்களில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மற்றுமொரு கப்பலிலிருந்து 37 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலை தரையிறக்கும் நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Tags:
sri lanka news