8,000 ஆசிரியர்கள் புதிதாக பாடசாலைகளுக்கு நியமிப்பு..!!!



8,000 ஆசிரியர்களை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் புதிதாக பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கல்வியியற்கல்லூரிகளில் அதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு விருப்பமுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பரீட்சை ஒன்றை நடத்தி அதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் புள்ளிகளின் அடிப்படையில் மாகாண சபை பாடசாலை ஆசிரியர்களாக அவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொண்டதன் பின்னர் மூன்று வருடங்களுக்குள் தேசிய கல்வி நிறுவனத்தின் ஒரு வருட டிப்ளோமா பாட நெறியை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பமளித்து பயிற்சி ஆசிரியர்களாக அவர்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here