மகிழ்ச்சியான செய்தி! மின்வெட்டுக் காலப்பகுதி குறையுமா?




நுரைச்சோலை அனல்மின் நிலைய மூன்றாவது மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சீர் செய்யப்பட்டு மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

முதலவாவது மற்றும் மூன்றாவது ஆகிய இரண்டு மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் முழு திறனில் இயங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் நடந்து வரும் 3 மாத வழக்கமான சீரமைப்பு பராமரிப்பு பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here