
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக 450 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒக்டேன் 92 ரக பெற்றுால் லீற்றரின் விலை தற்போது 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 410 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 540 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை 510 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக ஐ.ஓ.சி. நிறுவனமும் பெற்றோலின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதுடன் விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.