கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு..!!!




உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மாரவில மதர பகுதியில் வலஹபிட்டிய நோக்கிச் சென்ற காரை துரத்திச் சென்ற பொலிஸார், அதன் பின் சக்கரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியை விட்டு விலகி, மின்கம்பத்தில் மோதி நின்றதாக, பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர் கார் சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 125 சட்டவிரோத மதுபாட்டில்கள் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here