முகமாலையில் நிலக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது டிப்பர் மோதியதில் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
A9 பிரதான வீதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ். நோக்கி பயணித்த குறித்த பஸ் தமது நிறுவனத்திற்குள் செல்வதற்கு முற்பட்ட வேளை, பின்னால் பயணித்த டிப்பர் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் பஸ் வீதியில் குடைசாய்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் 16 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.