Saturday 15 October 2022

இனிமேல் பதிலடிதான்..? ரஷ்யாவை தாக்க தொடங்கிய உக்ரைன்..!!!

SHARE



கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அதை அதிகாரப்பூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்துள்ளது.

சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசிய சம்பவம் உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளானது. இவ்வளவு காலமாக உக்ரைன் தங்களது பிராந்தியத்தில் புகுந்த ரஷ்ய படைகள் மீது மட்டுமே போர் நடத்தி வந்தது.இந்த பிரச்சினைகளுக்கு பின்னர் தற்போது ரஷ்யாவுக்கு சொந்தமான பகுதியை தாக்கியுள்ளது உக்ரைன் ராணுவம்.

உக்ரைன் – ரஷ்ய எல்லையில் உள்ள ரஷ்யாவின் பிராந்தியமான பெல்கோராட் நகரம் மீது தாக்குதலை நடத்தியுள்ளது உக்ரைன். இதில் அந்நகரில் உள்ள துணை மின்நிலையம் தீப்பற்றியது. இதனால் அந்நகரில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.மேலும் உக்ரைன் ஏவுகணைகள் அப்பகுதியில் உள்ள ரயில் பாதைகள், பொதுவழி சாலைகளையும் தாக்கியுள்ளது. ரஷ்யாவின் பிராந்தியத்திற்குள் உக்ரைன் நடத்தியுள்ள இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE