ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு..!!!




ஒக்டோபர் 20-ம் திகதி முதல் கடலோரப் ரயில் பாதையின் ரயில் அட்டவணையில் திருத்தங்களை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கரையோரப் ரயில் பாதையின் ரயில் கால அட்டவணையை திருத்தியமைக்க ரயில்வே திணைக்களம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த நிலையில், பின்னர் அது இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பாதையின் ரயில் கால அட்டவணையில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வரும் 20ம் திகதி முதல், புதிய திருத்தங்களின்படி, தற்போதைய ரயில் இயக்க நேரத்தை விட, 10 நிமிடங்களுக்கு முன்னதாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதேவேளை, புதிய கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ள ரயில் பயணச்சீட்டுகள் வழங்கப்படாமையால் ரயில்வே திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கான பொறுப்பை தமது சங்கம் ஏற்றுக்கொள்ளாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here