யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் ஐரெக் தினம் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் இன்று (06.10.2022) மதியம் ஜெற்வின் விடுதியில் இடம்பெற்றது.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்கள் மற்றும் குறுகிய கால கற்கை நெறித் திட்டங்கள் பற்றியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் புலமைப்பரிசில்களைப் பெற்று பயிற்சிகளுக்கு சென்று வந்த பயனாளிகளின் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றன.
அண்மையில் வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் முன்னிலையைப் பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் உட்பட பல்வேறு துறை சார் அதிகாரிகள் நிர்வாகிகள் கல்வியலாளர்கள் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி