மீளாத்துயில் கொண்ட நண்பன்; வானரக் கூட்டாளியின் பாசப்போராட்டம்..!!!


நாளாந்தம் உணவளித்த நண்பன் உயிரிழந்த செய்தியறிந்த வானரக் கூட்டாளி நடத்திய பாசப்பேராட்டம் பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

காண்போரை நெகிழச்செய்த இந்த சம்பவம் மட்டக்களப்பு – தாழங்குடாவில் பதிவானது.

உணவளித்த நண்பன் மீளாத்துயில் கொண்டதை அந்த ஜீவனால் அத்தனை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியிவில்லை.

நாளாந்தம் உணவளித்த 52 வயது நண்பனை நேற்று (18) தேடிச்சென்ற வானரக் கூட்டாளிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உணவளித்து அளவளாவிய நண்பன் மீளாத்துயில் கொள்வதை அறியாத கூட்டாளி, நண்பனை துயில் எழுப்ப மேற்கொண்ட முயற்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது.

இறுதிப் பயணம் செல்லும் நண்பனுக்கு அவரின் கூட்டாளி அன்புடன் பிரியாவிடையளித்தார்.

வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து நண்பனை வழியனுப்புவதற்கும் இந்த வானரக் கூட்டாளி தவறவில்லை.

உப்பிட்டவரை உள்ளவும் நினை என்பதற்கு இதனை விட வேறென்ன உதாரணம் வேண்டும்?


Previous Post Next Post


Put your ad code here