
களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
பட்டிவெல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் தற்போது வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:
sri lanka news