உயிரை பறித்தது மீற்றர் வட்டி - யாழில் துயரம்..!!!



மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் வட்டி அதிகரித்து வாங்கிய பணத்தினை மீள செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்த சி.சிவரூபன் (வயது 37) என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த நபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக மீற்றர் வட்டிக்கு ஒரு தொகை பணத்தினை தனி நபர் ஒருவரிடம் வாங்கியுள்ளார். அந்த பணத்திற்கான வட்டி அதிகரித்து திருப்பி செலுத்த வேண்டிய பணத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.


இதனால் பணத்தினை திரும்ப செலுத்த முடியாத நிலையில் கடும் மனவுளைச்சலுக்கு உள்ளாகி இருந்தவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என மரண விசாரணைகளின் போது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

Previous Post Next Post


Put your ad code here