2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
அத்துடன், www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2021, மே 23 முதல் ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை மையங்களில் நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 517,496 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
அவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,367 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாவர்.
Tags:
sri lanka news