யாழ் பிரதேச செயலக கலாசார அலுவலர் ரஜிதா அரிச்சந்திரனின் "பக்திப் பாசுரங்கள் " நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (06.11.2022) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
மாகாணக் கல்வித்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ. கிரிதரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் ஆர்வலர்களையும் கலந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி