ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் செல்லத்துரை விந்தன் அவர்களின் பணிநயப்பு விழாவும் கண்டாவளையான் அறுபது வயதினிலே நூல் வெளியீட்டு நிகழ்வும் நாளை (06.11.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் அகஸ்ரின் கிறிஷ்டிரூபன் தலைமையில் இடம்பெற உள்ளது.
கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், மூத்த மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வில் நூல் வெளியீடும் கலை நிகழ்வுகளுடன் சிறப்புரைகளும் இடம்பெற உள்ளன. குறித்த நிகழ்வில் நண்பர்கள் ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி
Tags:
sri lanka news