கண் பார்வையிழந்த நிலையிலும் தேசிய ரீதியில் யாழ் மாணவன் சாதனை..!!!


கண் பார்வையிழந்த நிலையிலும் தளராத மன உறுதியுடன் கல்வி பயிலும் யாழ் வாழ்வக மாணவன் தங்கம் பதக்கத்தை தனதாக்கி சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட தமிழ் தின பேச்சுப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் கல்வி பயிலும் வாழ்வக மாணவன் சந்திரகுமார் அமலஅசாம் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கத்தை தனதாக்கி கொண்டார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவருக்கும் , மாணவனின் வெற்றிக்கு துணை நின்ற ஆசிரியர்களுக்கும் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here